30 MLA, 1 MP சீட்…. அதிமுக கூட்டணிக்கு செக்…. NDA கூட்டணியில் முக்கிய கட்சி….!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளை அறிவித்து விட்ட நிலையில் தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பாக மௌனம் காத்து வருகின்றன. இதனிடையே பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

சமீபத்தில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில நிபதனைகளை விதித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இப்படியான சூழலில் மறுபக்கம் பாஜக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாமக கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பாமக கட்சி அன்புமணியிடம் உள்ளது. அவரிடம் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

   
  விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்றால் 30 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாமகவில் மேலும் மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.