கரூர் கூட்ட நெரிசலில் நீங்க சாகலையா..? விஜய் ரசிகர் செய்த மோசமான கமெண்ட்… சரியான பதிலடி கொடுத்த லிவிங்க்ஸ்டன் மகள்..!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது .உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு tvk  தரப்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகளிடம் விஜய் ரசிகர் ஒருவர் அநாவசியமாகபேசி வாங்கி கட்டி இருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் ஜோவிடா லிவிங்க்ஸ்டன்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அப்பா லிவிங்ஸ்டன் தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவின் கமெண்டில் உங்கள் அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா? என்று கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் கடுப்பான ஜோவிடா, “ஓ ஹாய் TVK  நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து விட்டதாக அல்லவா நான் நினைத்தேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார். ஜோவிடாவின் இந்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.