கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர் கிராமத்திற்கே சென்று நியாயம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டெல்லியில் உள்ள மால் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு தன்னுடன் பணியாற்றிய பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் நீண்ட காலம் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு முறை கர்ப்பமடைந்து, வாலிபரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வாலிபருக்கு வரும் மே 2-ம் தேதி அவரது சொந்த ஊரில் திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த காதலி, அதிர்ச்சியடைந்து நேராக வாலிபரின் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அந்தப் பெண் வருவதை அறிந்த வாலிபர் தலைமறைவானார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமண ஆசை காட்டி தன்னுடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, இப்போது ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயல்வதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.