பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

By Soundarya on சித்திரை 23, 2026

Spread the love

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமிக்கு ஒரே அமர்வில் (Single Session) 18 பற்களிலும் அறுவை சிகிச்சை செய்ய பல் மருத்துவர் முயன்றுள்ளார். இதற்காகச் சிறுமிக்கு மயக்க மருந்து (Sedation) கொடுக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிறுமியின் பிஞ்சு உடல் மயக்க மருந்தின் தாக்கத்தையும், நீண்ட நேர சிகிச்சையையும் தாங்க முடியாமல் நிலைகுலைந்து போனது.

சிகிச்சையின் போது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவருக்கு இதயத் துடிப்பை மீட்கும் சிபிஆர் (CPR) சிகிச்சையை அளித்தனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுமி மீண்டும் கண் விழிக்காமலேயே உயிரிழந்தார். ஒரே நேரத்தில் இத்தனை பற்களுக்குச் சிகிச்சை அளிக்க முயன்ற மருத்துவரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.