“மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” வயதான தம்பதியருக்காக ரயிலையே நிறுத்திய லோகோ பைலட்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

ரயில் நிலையத்திலிருந்து மெதுவாகப் புறப்பட்ட ரயில், ஏற்கனவே நடைமேடையைத் தாண்டிச் செல்லத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்த வயதான தம்பதியினர் ரயிலைத் தவறவிட்டதை உணர்ந்து தவித்தனர். ஏதோ காரணத்தால் அவர்களால் சரியான நேரத்தில் ஏற முடியவில்லை.

தங்கள் பயணம் பாழாகிவிடுமோ என்ற பதற்றத்தில் இருந்த தம்பதியினரை, ரயிலை இயக்கிக் கொண்டிருந்த லோகோ பைலட் கவனித்தார்.

<

   

/div>

   
முதியவர்களின் நிலையைக் கண்ட அவர், சற்றும் தாமதிக்காமல் மனிதாபிமானத்துடன் உடனடியாக ரயிலை நிறுத்தினார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயில் நகரத் தொடங்குவதும், லோகோ பைலட் நுழைவாயிலில் நின்றபடி நிலைமையை உணர்ந்து கைகாட்டி ரயிலை நிறுத்துவதும் தெளிவாகத் தெரிகிறது. ரயில் நின்றதும், அந்த வயதான தம்பதியினர் நிம்மதியுடன் ஓடிச் சென்று ரயிலில் ஏறினர்.