எம்.ஜி.ஆரின் மனைவியை பேட்டி எடுக்க சென்று தலை சுற்றிப்போன பத்திரிக்கையாளர்.. அங்க நடந்த விஷயம் இருக்கே..!!

By admin on ஆவணி 8, 2024

Spread the love

பிரபல நடிகர் எம்ஜிஆரின் மூன்றாவது மனைவி வி.என் ஜானகி. இவரும் பிரபல நடிகை தான். ஒரு முறை பத்திரிக்கையாளர் ஒருவர் வி.என் ஜானகியை பேட்டி எடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வி.என் ஜானகியின் தம்பி நாராயணன் இருந்துள்ளார். இந்த நிலையில் பத்திரிகை நிருபரிடம் வி.என் ஜானகி தினமும் என்னென்ன செய்வார் என்பதை உங்களுக்கு பட்டியல் போட்டு சொல்லட்டுமா என நாராயணன் கேட்டார்.

   

உடனே குஷியான பத்திரிகை நிருபரும் வரும் ஒரு நோட்டு பேனாவை எடுத்து எழுதுவதற்கு தயாரானார். அப்போது நாராயணன் வி.என் ஜானகி அதிகாலையிலேயே எழுந்து பீச்சுல ஒரு மணி நேரம் வாக்கிங் போவாங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேட்மிட்டன் விளையாடுவாங்க. 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ள காலையில சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் சங்கீதம் கேப்பாங்க.

   

ജയലളിതയ്ക്ക് എം.ജി.ആര്‍ കൂടുതല്‍ അംഗീകാരവും സ്ഥാനവും കൊടുക്കുന്നത് ജാനകിയെ  വേദനിപ്പിച്ചു, janaki ramachandran, vn janaki, mg ramachandran, j  jayalalitha

 

அதுக்கப்புறம் பத்திரிக்கையாளர்களோட ஒரு மணி நேரம் பேசுவாங்க. 11 மணிக்கு ஸ்டூடியோ கிளம்பி போயி மாலை 5 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்புறம் ஒரு மணி நேரம் மாதர் சங்கம், அடுத்து டென்னிஸ் என நாராயணன் பட்டியலிட்டுக்கொண்டே போனார். இதனை கேட்டதும் ஆச்சரியத்தில் பத்திரிக்கை நிருபர் வி.என் ஜானகி இதெல்லாம் பண்ணுவாங்களா என கேட்டார். உடனே இதெல்லாம் வி.என் ஜானகி பண்றது கிடையாது அப்படிங்கறத தான் நான் சொல்ல வந்தேன் என நாராயணன் கூறியுள்ளார்.

Mohini (1948) Block Buster Tamil Thriller,Action Full Movie|M.G.R | V.N. Janaki|Madhuri Devi - YouTube

அப்போ வீட்டுல இருக்கும்போது விஎன் ஜானகி என்னதான் பண்ணுவாங்க? அப்படின்னு பத்திரிகை நிருபர் கேட்டுள்ளார். அதற்கு நாராயணன் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் வி.என் ஜானகியும் செய்வார். இங்கு சமைப்பதற்கு கூட ஆள் கிடையாது. அதையும் வி.என் ஜானகி தான் செய்வார் என கிண்டலாக கேட்டுள்ளார். ஏதோ பட்டியலிட்டு சொல்லப் போகிறார் என காத்திருந்த பத்திரிகையாளருக்கு நாராயணனின் பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

சினிமா வரலாறு-75 - எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் - Touring  Talkies