கார்த்திக் என் கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரேவதி கிட்ட.. ஓப்பனாக பேசிய நடிகை சுலக்சனா..!!

By admin on ஆவணி 8, 2024

Spread the love

பிரபல நடிகையான சுலக்ஷனா தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் பாக்கியராஜ் இயக்கி நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னத்தம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்களிலும் சுலக்ஷனா நடித்துள்ளார்.

   

சமீபத்தில் சுலக்ஷனா அளித்த பேட்டியில் கூறியதாவது, சின்ன வயசுலயே ஹீரோயின் ஆகணும்னு என் வீட்டுல கண்டிப்பா சொல்லிட்டாங்க.நெறைய ஆடிஷன் போயிருக்கேன். நீ சின்ன பொண்ணா இருக்க, ஒல்லியா இருக்க, அப்படி இப்படின்னு சொல்லி என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஹீரோயின் ஆனேன். இதனை அடுத்து எந்த நடிகரோட கிசு கிசு வந்திருக்கு என சித்ரா லட்சுமணன் கேட்டார்.

   

நடிகர் கார்த்திக்கின் 2 மனைவிகள் மற்றும் மகன்கள் - வைரல் புகைப்படங்கள்! –  News18 தமிழ்

 

அதற்கு பதில் அளித்த சுலக்ஷனா கார்த்திக் சாரோட நான் ரொம்ப க்ளோசா இருப்பேன். அவர் எனக்கு பிரதர் மாதிரி. நான் அவர் கூட நிறைய படம் பண்ணி இருக்கேன். ஒரு தடவை ட்ராவல்ல இருந்தோம். அப்போ கார்த்திக் என்கிட்ட இனிமேல் நான் உன் கூட சேர்ந்து படம் பண்ண மாட்டேன்னு சொன்னாரு. நான் ஏன்னு கேட்கும் போது உன் கூட கெமிஸ்ட்ரியே வரமாட்டேங்குது. உன்ன பார்த்தா பாய் ஃப்ரெண்ட் மாதிரிதான் ஒரு பீல் ஆகுது. உன்ன பார்த்தா என்ன பார்த்த மாதிரிதான் இருக்குது. நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் மாதிரி தான் இருக்க.

அலைகள் ஓய்வதில்லையில் உருவான "ஆக்டிங்" சுனாமி.. சாக்லேட் பாய்..  கார்த்திக்குக்கு ஹாப்பி பர்த்டே! | The evergreen chocolate boy Actor  Karthik celebrates his 59th birthday ...

அடுத்த படத்துல இருந்து உனக்கு நான் NO சொல்லிடுவேன்னு சொன்னார். இதே மாதிரி கிழக்கு வாசல் படம் ஷூட்டிங் நடந்த போது கார்த்திக், ரேவதி உட்கார்ந்திருந்தாங்க. நான் என் பையனோட அங்க போய் பேசிட்டு இருந்தேன். அப்போது கார்த்திக் ரேவதியிடம் என்னை அறிமுகப்படுத்தி வச்சு இது யார் தெரியுமா? இது என்னோட பாய் ஃப்ரெண்ட். என்னோட க்ளோஸ் பிரண்ட் அப்படின்னு சொன்னாரு. மத்தபடி எந்த ஹீரோக்களோடும் எனக்கு கிசுகிசு வந்தது கிடையாது என கூறியுள்ளார்.

14 வயசுலையேவா.. விவரம் இல்லாமல் அந்த வயசுல பண்ணிட்டேன்!..மனம் திறந்த நடிகை…