தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா. கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
![]()
விவாகரத்து ஆன பிறகு நடிகை சமந்தாவும் மையோசிட்டிஸ் சென்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். இப்போது சமந்தா ஆன்மீகம், சினிமா என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக நாக சைத்தன்யாவும் நடிகை சோபிதா துலிபாலாவும் ஒரே இடத்துக்கு சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் இன்று ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/yVgHsJEae5nn0Fy31qBQ.jpg)
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. நாகர்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமி விவாகரத்து செய்தார். பின்னர் இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல நாக சைதன்யாவும் சமந்தாவை விவாகரத்து செய்தார். தற்போது சோபிதாவை திருமணம் செய்ய போவதாக வரும் செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

