தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர். அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை.
இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றனர். வாலி இயக்குனர் சங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் தொடங்கி அனைத்து படத்திலும் பாடல்களை எழுதியிருப்பார். அந்தவகையில் காதலன் படம் 1994ஆம் வருடம் வெளியானது. இதில் பிரபுதேவா நடித்திருந்தார். இந்த படத்திற்கு வாலி மூன்று பாடல்களை எழுதியிருந்தார்.
இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் “முக்காப்புலா” பாடலை யாருமே மறக்க முடியாது. பாட்டுக்கு இடையில் 90 சதவீத வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும் படியாக எழுதியிருப்பார் வாலி. இந்த பாடலுக்கான டியூனை ஏஆர் ரகுமான் வாலியிடம் கொடுத்துள்ளார். இந்த டியூனுக்கு பாடல் எழுதும் முன்பு இந்த பாடலை பாட பாடகர் மனோ அங்கு வந்தாராம். மனோ வருவதை பார்த்த வாலி நீங்கள் போய் பரோட்டா சாப்பிட்டு விட்டு வாங்க நான் பாடல் எழுதி முடிக்கிறேன் என்று அவரை வெளியே அனுப்பி உள்ளார் .இதைக் கேட்ட பாடகர் வெளியே சென்று பரோட்டா சாப்பிட்டு விட்டு மீண்டும் ஸ்டூடியோக்கு திரும்பியுள்ளார். ஆனால் வாலி அதற்குள் பாடலை எழுதி முடித்துள்ளார் .90% ஆங்கில வார்த்தைகள் நிரம்பய இந்த பாடலை மனோ மற்றும் சுவர்ணலதா பாடியிருந்தார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…