Categories: சினிமா

அந்த சூப்பர் ஹிட் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படும் நயன்தாரா… எல்லாம் அந்த நடிகருக்காக தானா..?

Spread the love

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தார் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும். 2003 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான நயன்தாரா பின்னர் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நயன்தாரா.

தொடர்ந்து சிவகாசி கஜினி வல்லவன் யாரடி நீ மோகினி சத்யம் பாஸ் என்கிற பாஸ்கரன் ஏகன் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார் நயன்தாரா. 2010 காலகட்டத்திற்குப் பிறகு சினிமா கேரியரில் நல்ல ஒரு உயரத்தை எட்டினார் நயன்தாரா. ஹீரோவே இல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட படங்களில் நடித்த நயன்தாரா கோலமாவு கோகிலா இமைக்கா நொடிகள் நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதனால் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைத்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமே சர்ச்சையாக தான் நடந்தது. பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் சந்தானம் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,  ஒரு சமயம் பணம் சம்பந்தமாக விக்னேஷ் அவனை பார்க்க சென்றுள்ளார் சந்தானம். அந்த சமயத்தில் நயன்தாரா தன்னுடைய இரண்டு குழந்தைகளிடமும் மாமா வந்திருக்காரு பாருங்க என்று சொன்னாராம். உடனே சந்தானம் நான்தான் உன்னுடைய மகன்களுக்கு தாய் மாமன் என்றும் சொன்னாராம்.

இவர் வருகிறார் என்று தெரிந்த நயன் பல வகையான உணவுகளை தயாரித்து வைத்துள்ளார். சினிமாவில் தங்கச்சி என்ற வகையில் பழகும் நடிகை என்றால் அது நயன்தாரா தான் என்று கூறியுள்ளார். வல்லவன் படத்தில் இருந்து அவர் எனக்கு பழக்கம் என்றும் தொடர்ந்து அவரோடு பட பழங்களின் நடிப்பேன் என்று கூறியிருந்தார் சந்தானம். மேலும் பாஸ் என்ற பாஸ்கரன் பட இரண்டாம் பாகத்தில் ஆர்யா, சந்தானம் ஆகியோர் காம்போவில் நடிக்க கூப்பிட்டார்கள் என்றால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நயன்தாரா இயக்குனர் ராஜேஷிடம் கூறியிருக்கிறார்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago