Categories: சினிமா

பிரதீபுக்கு நேர்ந்த அநீதி… விஜய் டிவியை வம்புக்கு இழுக்க ஜீ தமிழ் வெளியிட்ட (வீடியோ)…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.  இவர்களில் கலந்து கொண்ட நாள் முதலே மிகவும் சாதுரியமாகவும், பிக் பாஸ் கேமை நன்றாக புரிந்து கொண்டும் விளையாடியவர் தான் போட்டியாளர் பிரதீப். இவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் கவினின் நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார் பிரதீப். அப்பொழுது அவரை ஓங்கி அறைந்தார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்பொழுது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி வந்தார். இவர் தான் டைட்டிலே வெல்வார் என்று இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சக ஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு, ஒரு பொய்யான குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.

  

அதாவது பிக் பாஸ் வீட்டில் இவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெரும்பாலான போட்டியாளர்கள் வாக்களித்து, அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து, கமலஹாசன் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த சர்ச்சை தற்பொழுது வரை தீயாய் பற்றி எரிந்து வருகிறது. இணையத்தில் பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருப்பது பிரதீப் விவகாரம் தான். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதாவது பிரதீப் நடித்த ‘வாழ்’ திரைப்படத்தை தனது டிவியில் ஒளிபரப்பு செய்யும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Red கார்டோ,  Yellow கார்டோ நீங்க பிரதீப்ப மிஸ் பண்றீங்களா? இப்ப ட்ரெண்டிங்கில் இருக்க பிரதீப் நடித்த ‘வாழ்’ திரைப்படம் நவம்பர் 13 அன்று இரவு 9 மணிக்கு  ஜீ திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். மிஸ் பண்ணாம பாருங்க’ என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பாஜக – தி.மு.க இடையே ரகசிய உறவு…? தவெக போட்ட அதிர்ச்சி குண்டு… உண்மையை உடைத்த தமிழிசை..!!

பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

17 seconds ago

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

6 minutes ago

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

12 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

19 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

29 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

42 minutes ago