திக்.. திக்..! அப்படி என்ன தான் இருந்தது?… துணிச்சலா? திமிரா?… போலீஸ்காரரை பானெட்டில் ஏற்றி சென்ற கார் ஓட்டுநர்… பதைபதைக்கும் CCTV…!!

By Gayathri on ஐப்பசி 19, 2026

Spread the love

தலைநகர் தில்லியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், வேகமாகச் சென்ற காரின் பானெட்டில் தொங்கியபடி இழுத்துச் செல்லப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது. கடந்த மே மாதம் இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த லேக்ராஜ் என்ற காவலர், தாறுமாறாக வந்த சாம்பல் நிற ஹோண்டா சிட்டி காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், காரை நிறுத்துவதற்குப் பதிலாக ஓட்டுநர் தப்பியோட நினைத்து வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததால், நிலைதடுமாறிய காவலர் காரின் முன்பகுதியைப் பற்றிக்கொண்டு தொங்க நேரிட்டது.

புரானா கிலா சாலை வழியாக கடலோரக் காவல் படை தலைமையகம் வரை சுமார் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்தக் காவலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவம் நிகழ்ந்து சுமார் ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இக்காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த காவலரின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் துணிச்சலாக காரை ஓட்டிச் சென்ற நபரின் இந்த அத்துமீறல் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனத்தைப் பெற்றுள்ளது.