Categories: சினிமா

ஒரு நடிகரா நீங்க இப்படி… பெங்களூரில் தாக்கப்பட்ட சம்பவம்.. நடிகர் விஜய்சேதுபதிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். ஹீரோவாக முதலில் கலக்கி வந்த இவர் தற்போது வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு போல் மாறி நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார். தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவர் பான் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார்.

#image_title

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்து வாக்குல இரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, விக்ரம், ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதில் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது இவர் வில்லன், ஹீரோ என இரண்டு கதாபத்திரங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

 

இதைத்தொடர்ந்து விஜய்சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரையின்’ எனும் படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி- மகா காந்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் போடப்பட்டிருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதாவது சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி அவர்கள் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார்.  அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விஜய்சேதுபதியை எட்டி உதைத்த நபர் மகா காந்தி. காரணம், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா காந்தி சென்றிருக்கிறார். பிறகு அவர் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மகாகாந்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்சினையை இரண்டு தரப்பு நபர்களும் உட்கார்ந்து பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தது.

ஆனால், இருவரும் பேசி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிமன்றம், ஏற்கனவே இந்த விவகாரத்தை சமரசமாக பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம் என கேள்வி எழுப்பியது. மேலும் விஜய் சேதுபதி தரப்பை பார்த்து ‘ ஒரு பெரிய நடிகராக நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளது.

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

6 மணத்தியாலங்கள் ago