Connect with us

மீனாவின் மாஸ்டர் பிளான், ஸ்ருதி செய்த மேஜிக்.. உண்மையை உளறினாரா மனோஜ்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

CINEMA

மீனாவின் மாஸ்டர் பிளான், ஸ்ருதி செய்த மேஜிக்.. உண்மையை உளறினாரா மனோஜ்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. விரைவில் மனோஜும் விஜயாவும் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசையுடன் காத்திருக்கிறார்கள். பாட்டியின் 80-தாவது பிறந்த நாள் நல்லபடியாக முடிந்து விட்டது. மேலும் பாட்டிக்கு கொடுக்க நினைத்த அனைத்து சிறப்பு பரிசுகளையும் அனைவரும் கொடுத்து விட்டார்கள் .

   

அதுமட்டுமில்லாமல் பாட்டி முத்து மீனாவுக்கு தான் பரிசு கொடுத்திருக்கின்றார். இதனால் விஜயா மற்றும் மனோஜ்க்கு வைத்தெரிச்சலாக இருக்கின்றது. பிறகு மனோஜ் பாட்டியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றார்.  வீட்டின் கதவை சாத்தி அனைவரையும் ஹாலுக்கு வர சொல்கின்றார் .அப்போது மீனாவை நகையை எடுத்துட்டு வா என்று கூறிய முத்து பின்னர் நகையை அனைவரிடமும் காட்டி அனைத்து உண்மைகளையும் சொல்கின்றார்.

 

பாட்டிக்கு செயின் வாங்க எண்ணி தான் இந்த நகையை கேட்டோம். ஆனால் கடையில் கொண்டு போய் கொடுத்த போது இதனை எல்லாம் கவரிங் என்று கூறி விட்டார்கள். இது எப்படி கவரிங் நகை மாறியது என்று கூற விஜயா எதுவும் தெரியாதது போல் நடிக்கின்றார். மேலும் அவர்கள் கொடுத்த நகை தான் நான் பத்திரமாக வைத்திருந்தேன். எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது.

ஒருவேளை மீனா வீட்டில் கவரிங் நகையை போட்டு வைத்திருப்பார்கள் என்று கூறுகிறார். மீனாவும் என் குடும்பத்தின் மீது பழி போடாதீர்கள் என்று சொல்கின்றார். எங்க வீட்டில் தங்க நகை தான் போட்டார்கள் . இங்கு வந்த பிறகுதான் அது கவரிங் நகை மாறிடுச்சு என்று கூறுகின்றார். இப்படி அனைவரும் மாறி மாறி பேச ஸ்ருதி போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம் என்று கூறுகின்றார்.

அதற்கு முத்து அதெல்லாம் வேண்டாம் என்று சாயங்காலம் வரை டைம் கொடுக்கிறேன். அது எப்படி கவரிங் நகையா வந்துச்சு என்று எனக்கு தெரிய வேண்டும் என்கின்றார். பிறகு முத்துவும் மீனாவும் மனோஜ் மீது தான் சந்தேகப்படுகின்றார். இதனால் மீனா ஒரு ஐடியா கூறுகின்றார். நாம் ஸ்ருதியை வைத்து வேறு ஒருவர் போல் பேசி மனோஜிடம் உண்மையை வாங்கிவிடலாம் என்று ஐடியா கூறுகின்றார். அதன்படி ரவிக்கு போன் செய்து ஸ்ருதியை ரெஸ்டாரண்டுக்கு வர சொல்கின்றார்.

அங்கு பிளான் போட்டபடி மீனாவும் தனது குரலை மாற்றி மனோஜிடம் பேசுகின்றார். நீங்கள் எங்களிடம் கவரிங் நகை வாங்கிட்டு போனீங்க. அந்த நகை உங்களுக்கு நன்றாக இருக்கின்றதா? ரிவியூ கூறுங்கள் என்று கேட்கின்றார். முதலில் திருதிருவென்று முடித்த மனோஜ் பிறகு இல்லை நான் அப்படியெல்லாம் எந்த நகையும் வாங்கவில்லை என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகின்றார். விரைவில் மனோஜ் மாட்டுவார் முத்துவிடம் தரும அடி வாங்குவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top