அடேங்கப்பா.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நம்ம இர்ஃபான்.. முழு சொத்து மதிப்பு விவரம் இதோ..!

By Mahalakshmi on ஜூலை 10, 2024

Spread the love

பிரபல youtubeரான இர்பானின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. இதை கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் வெளியில் சென்று கஷ்டப்பட்டு வேலை பார்த்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். என்றெல்லாம் இல்லை வீட்டில் இருந்து கொண்டே ஈசியாக பணம் சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது. அதிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு பலரும் youtube களை திறந்து அதில் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். அதிலும் வீட்டில் இருந்து கொண்டே பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

   

   

பல youtube சேனல்களில் தங்கள் வீட்டில் நடப்பது, டிராமாக்கள், பிராங்க் மக்களுக்கு தெரியாத விஷயம் என அனைத்தையும் காண்பித்து பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள். அப்படி யூடிபில் மிகப் பிரபலமான நபர் தான் இர்பான். இர்பான் வியூஸ் என்ற youtube பக்கத்தை திறந்த இவர் தொடர்ந்து பலவிதமான ஹோட்டல்களுக்கு சென்று அசைவ உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ கொடுப்பவர். இவரது ரிவ்யூகள் வலைதளங்களில் எப்போதும் பிரபலமாக இருக்கும்.

 

youtube பக்கங்களை தாண்டி பேஸ்புக்கிலும் இவருக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகின்றது. இவர் உணவு ரிவ்யூ மட்டும் இல்லாமல் தன் வீட்டில் நடப்பது நல்ல விஷயம், திருமணம் என அனைத்தையும் சேனல்களில் போட்டு வருகின்றார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கின்றார்.

இந்த வீடியோவும் அவரே யூடியுப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  இர்பானுக்கு இன்ஸ்டா பக்கம்  உள்ளது.   Irfan’s View மற்றும் Irfan’s View Official என இரண்டு பக்கங்களை வைத்திருக்கின்றார். 9 லட்சத்து 81 ஆயிரம் பாலோவர்ஸ்களும், மற்றொன்றில் 1.4 மில்லியன் பாலோர்களும் இருக்கிறார்கள். இவர் தனது youtube பக்கத்தை 2009 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 4. 29 மில்லியன் சப்ஸ்கிரைபர் வைத்திருக்கின்றார்.

இப்போது வரைக்கும் அவர் 2445 வீடியோக்களை யூடியூபில் போஸ்ட் செய்து இருக்கின்றார். ஒரு வீடியோவுக்கு இரண்டு முதல் நான்கு லட்சம் வரை சம்பாதிக்கும் இவர் மாதத்திற்கு 15 முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கிறார் என கூறப்படுகின்றது .மேலும் இவருடைய சொத்து மதிப்பு மட்டும் இரண்டு புள்ளி இரண்டு கோடி வரை இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.