“அதுக்கு தான் நான் இருக்கேன்.. அவன் கூட ஏன் போன?”… காட்டில் கேட்ட மரண ஓலம்.. மடியில் கிடந்த பிணம்… கடைசியில் போலீசுக்கு காத்திருந்த ‘ட்விஸ்ட்’….!

Spread the love

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ரகுநந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவர், தனது மனைவி சுமன் குமாரியைத் திட்டமிட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதிக்குத் தனது மனைவியை அழைத்துச் சென்ற சந்தன், அங்கே தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், சந்தன் குமார் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் போலீசாருக்குத் தானே தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தனது மனைவியின் சடலத்தைக் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுது பெரும் நாடகமாடியுள்ளார். தனது குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு அவர் காட்டிய இந்த போலிப் பாசம், அங்கிருந்த மக்களை ஒரு நிமிடம் கலங்க வைத்தது. இருப்பினும், அவரின் நடத்தையில் போலீசாருக்குச் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அந்த ‘ட்விஸ்ட்’ வெளிப்பட்டது. தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகப்பட்ட சந்தன், அவரைத் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சுமன் குமாரி தனது போக்கை மாற்றிக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த சந்தன் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுத் துப்பாக்கியை வாங்கியதை ஒப்புக்கொண்டார். ஊர் மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடலாம் என்ற அவரின் திட்டம் விசாரணையில் தோல்வியடைந்தது.

இறுதியாக, சந்தன் குமாரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைக்குழந்தையின் முன்னாலேயே தாயைச் சுட்டுக் கொன்ற இந்தக் கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தன் குமார் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“1993 நரசிம்ம ராவ்… 2026 விஜய்?”… தமிழக அரசியலில் அடுத்த ‘சிபிஐ’ அணுகுண்டு… இன்பதுரை போட்ட அந்த ஒரு ட்வீட்….!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…

4 minutes ago

அதிமுகவிலிருந்து ‘அவுட்’… தவெக-வில் ‘இன்’… கோட்டையை ஆளப்போகும் அந்த 7 விக்கெட்டுகள் யார்?… ராஜ்பவனுக்கு போகும் அந்த ‘லிஸ்ட்’…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…

8 minutes ago

BREAKING: “தமிழக அமைச்சரவையில் விஜய் செய்யும் மாஸ் சம்பவம்”… 1967-க்கு பிறகு நடக்கப்போகும் அந்த வரலாற்றுச் சம்பவம்…!

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…

13 minutes ago

இனி ஒரு கீறல் கூட விழாது… CM விஜய் பார்த்து பார்த்து வாங்கிய 5050 கார்…. வாயடைக்க வைக்கும் மிரட்டலான தொழில்நுட்பம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…

18 minutes ago

“அதிமுகவில் அடுத்த பிளவு?”…. சி.வி.சண்முகத்தின் டெல்லி ரகசிய பயணம்.. இபிஎஸ்-க்கு காத்திருக்கும் செக்… உடைத்த பகீர் உண்மை….!

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…

24 minutes ago

திடீர் பல்டி அடித்த கே.சி. வீரமணி… அதிமுகவில் அதிரடி திருப்பம்… EPS-க்கு கொடுத்த ‘சர்ப்ரைஸ்’…!

அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இந்தத் திடீர்…

28 minutes ago