“தவெக நடத்திய குதிரை பேரம் உண்மைதான்”.. ஓ.எஸ். மணியன் வெளியிட்ட அதிரடி ஆதாரம்..!!

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குதிரை பேரத்தில் ஈடுபட்டது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற துணைத் தலைவருமான ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அதிரடி அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடுத்த பத்தே நிமிடங்களில் மேல்தளத்தில் தவெக அமைச்சர்கள் முன்னிலையில் அந்தக் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவதாகவும் சாடியுள்ளார். அரசின் தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகம் போல மாற்றி, இந்த கட்சி தாவல் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தவெக தரப்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தாலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) பக்கமே மிக உறுதியாக உள்ளனர் என்று ஓ.எஸ். மணியன் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு சிலர் சுயநலத்திற்காகவும், தங்களது சொந்த ஆதாயங்களுக்காகவும் மட்டுமே தவெக பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கட்சித் தலைமைக்கு துரோகம் செய்தவர்கள் மீது நிச்சயம் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஓ.எஸ். மணியனின் இந்த அதிரடிப் பேட்டி தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

9 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

10 மணத்தியாலங்கள் ago