தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், தன் முதல் நாளிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், சைபர் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை’ திட்டத்திற்கான முக்கியக் கோப்பில் கையெழுத்திட்டார். இந்தத் திட்டத்திற்காக ஐஜி பவானீஸ்வரி தலைமையில் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் பிரத்யேகப் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மாநிலம் முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். தமிழகத்தின் சுமார் 37 முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு இந்தச் சிறப்புப் படையினர் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், நாளை பிரம்மாண்டமான அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க இருந்த நிலையில், இவ்விழா தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். பிரதமர் மோடியுடனான இந்த முக்கியச் சந்திப்பின் காரணமாகவே சிங்கப்பெண் திட்டத் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியவுடன், அடுத்த சில தினங்களிலேயே இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள சூழலில், மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இத்திட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்தான விமர்சனங்கள்…