உத்தரப் பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டம், ஃபஃபூந்த் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபேந்திரா என்ற இளைஞர், கல்பனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கல்பனா தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, உபேந்திராவை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு சென்ற உபேந்திராவை, கல்பனாவின் தாய்மாமன் மகன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
https://x.com/i/status/2001622423511413150
மேலும், உபேந்திராவுக்குச் செருப்பு மாலை அணிவித்து, கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு (FIR) செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட கல்பனாவின் உறவினர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
