தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் இறங்கிய பிறகு திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய போட்டியாக மாறியுள்ளது. விஜயின் வருகை ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரிய சிக்கலாகவே மாறியுள்ளது.
அதேசமயம் திமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக கூறி வருகிறது. அதேசமயம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
கோபியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்கும் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகின்றார். இதனிடையே கோபி தொகுதியில் அதிமுகவை பலப்படுத்த இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார். உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உட்பட கோபி தொகுதியில் இருந்து 75க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளன. தேர்தல் பணிகளில் முழு வீச்சில் செயல்படுமாறு அவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். செங்கோட்டையன் தொகுதியில் இத்தகைய இணைப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
