நாடே அதிர்ச்சி… 19 வயது இளம்பெண்ணை 2 மாதங்களாக மாறி மாறி 3 இளைஞர்கள் செய்த கொடூரம்… வெளியான திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

கர்நாடகாவில் உள்ள மகதி நகர் பகுதியில் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் அவர் படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவரான விகாஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதனிடையே விகாஸ் அந்த பெண்ணை தன்னுடைய நண்பனான பிரசாந்த் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். காதலனை நம்பி அந்தப் பெண் அங்கு சென்ற நிலையில் வீட்டில் வைத்து இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்கள் நெருக்கமாக இருப்பதை விகாசின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை வைத்து இளம் பெண்ணை விகாஷ், பிரசாந்த் மற்றும் சேர்த்தனாகிய மூவரும் மிரட்டியுள்ளனர். தாங்கள் அழைக்கும் போதெல்லாம் இங்கு வந்து செல்ல வேண்டும் என்று கூறி பலமுறை அந்த பெண்ணை அவர்கள் மூன்று பேரும் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக நீடித்த இந்த துன்புறுத்தலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.