திருமண விழாவில் மங்கள இசை முழங்க, உறவினர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு நடுவே ஒரு ‘ஸ்கார்பியோ’ காரினால் ஒட்டுமொத்த கல்யாணமும் பாதியிலேயே நின்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன், தான் வரதட்சணையாகக் கேட்டிருந்த ஸ்கார்பியோ கார் வரவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக வேறு கார் தரப்பட்டதையும் அறிந்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். மணப்பெண் வீட்டார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத அவர், மண்டபத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்தார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மணமகன் திடீரென மணமேடையை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் திருமண மண்டபத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார். இதைக் கண்டு நிலைகுலைந்த மணப்பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள், மாப்பிள்ளையைத் தடுத்து நிறுத்த அவர் பின்னாடியே ஓடினர். இதனால் திருமண மண்டபமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது. ஒரு சொகுசு காருக்காகப் பெண்ணின் வாழ்க்கையையும், குடும்பத்தின் மானத்தையும் பொருட்படுத்தாமல் மணமகன் ஓடிய இச்சம்பவம் அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…