நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் கழிவறை நேரத்தைக் கண்காணிப்பதாகவும், அதிக நேரம் இடைவேளை எடுத்தால் அதற்குப் பதிலாகக் கூடுதல் நேரம் வேலை செய்யக் கோருவதாகவும் ஊழியர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ரெடிட்’ தளத்தில் பகிரப்பட்ட இந்தத் தகவல், தற்காலப் பணியிடங்களில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான கண்காணிப்பு முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியர் பகிர்ந்துள்ள தகவலின்படி, அவர் பணிபுரியும் நிறுவனம் ஊழியர்களின் ஓய்வு நேரத்தைக் கணக்கிட ஒரு புதிய மென்பொருளைப் பயன்படுத்துகிறது. இதில் ஊழியர்கள் கழிவறைக்குச் செல்லும் நேரமும் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி யாராவது கூடுதல் நேரம் கழிவறையில் செலவிட்டால், அந்த நிமிடங்களை ஈடுகட்ட அவர்கள் அன்றைய தினத்தின் இறுதியில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூட இப்படி மனிதாபிமானமற்ற முறையில் கண்காணிப்பது ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், இது போன்ற கடுமையான விதிகள் பணியிடங்களில் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…