“திரைப்பட ரேஞ்சுக்கு ஆக்டிங்…” வலிப்பு வந்தது போல நாடகமாடிய பாட்டி…! கடைசியில் இப்படி ஒரு டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கலையே…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது போலக் கைகால்களை உதறி நடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு முதலுதவி செய்து, மருத்துவச் செலவிற்காகத் தங்களால் இயன்ற பணத்தையும் கொடுத்து உதவியுள்ளனர்.

ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் இதே பாணியில் நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சிலர் கவனித்துள்ளனர். இதையடுத்து, அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் தங்களது கைபேசியில் ரகசியமாகப் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அவரது உண்மை முகம் அம்பலமானது. இந்த வைரல் வீடியோ ஆதாரங்களை வைத்துக் கொண்டு, பொதுமக்களை ஏமாற்றிய அந்த மர்மப் பெண்ணைப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.