“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி திருச்சி விமான நிலையத்தில் தெரிவித்தார். மேலும், தான் பேசாத விஷயங்களை கட் செய்து, ஒன்றாக இணைத்துத் தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தான் மனைவி மற்றும் மகளுடன் குடும்பமாக வாழ்பவன் என்று குறிப்பிட்ட அவர், தான் எந்தவித இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை என்றும், ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் விளக்கமளித்தார். அத்துடன், இனிவரும் காலங்களிலும் மீண்டும் மீண்டும் அவ்வாறே பேசுவேன் என்றும் உறுதியளித்தார்.