விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் வழங்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற பின் பேசிய அவர், தவெக-வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்படும்போது அனைவரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தார். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், பொதுமக்கள் அரசுக்குச் சற்று ஒத்துழைப்பு வழங்கி அவகாசம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே வேறு ஏதேனும் அரசு திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற்று வருபவர்கள் மற்றும் இதுவரை எந்தவொரு பயனும் பெறாத புதிய பயனாளிகள் என இரு தரப்பிலும் தகுதியுடைய அனைவரும் விடுபடாமல் சேர்க்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த நல்லாட்சியாக விளங்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், இத்திட்டம் தொடங்கப்படும்போது தகுதியான பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத்தொகை கிடைப்பது நிச்சயம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…
மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…