வீட்டு வாடகை தொடர்பாக அரசாங்கம் “வாடகை சட்டம் 2025” என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வாய்மொழி அல்லது சிறிய காகித ஒப்பந்தங்கள் மூலமே வாடகை பரிவர்த்தனைகள் நடந்ததால், அதிக முன்பணம் கேட்பது, திடீர் வாடகை உயர்வு போன்ற பல சிக்கல்கள் வாடகைதாரர்களுக்கு ஏற்பட்டன. இந்தப் புதிய சட்டம், வாடகை தொடர்பான அனைத்து விஷயங்களையும் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் கொண்டு வந்துள்ளது.
-
வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்வது கட்டாயம். ஒப்பந்தம் ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் உள்ளூர் வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
-
பாதுகாப்பு வைப்புத் தொகை (அட்வான்ஸ்) இரண்டு மாத வாடகைக்கு மேல் இருக்கக் கூடாது, இது வாடகைதாரர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும்.
-
வாடகையை உயர்த்தும்போது, வீட்டு உரிமையாளர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.
-
வாடகைதாரர்களை திடீரென வீட்டை காலி செய்யுமாறு கேட்க முடியாது; சட்டப்படி சரியான முறையைப் பின்பற்ற வேண்டும்.
-
வாடகைதாரர்கள் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தத்தைப் பெற வேண்டும்.
-
வாடகை வருமானத்தின் மீதான டிடிஎஸ் (TDS) வரம்பு ஆண்டுக்கு ரூ. 2.4 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் உரிமையாளர்களுக்கு விரைவாகப் பணம் கிடைக்கும்.
-
ஒரு வாடகைதாரர் ஓராண்டில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வாடகை செலுத்தவில்லை என்றால், உரிமையாளர்கள் விரைவாகப் பிரச்சனையைத் தீர்க்க வாடகை தீர்ப்பாயத்தை அணுகலாம்.
-
வாடகை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்த வாடகை தீர்ப்பாயங்கள் உருவாக்கப்படும்.
இந்தச் சட்டம், வாடகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் இருவரின் உரிமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
