காலையிலேயே அனல் பறக்கும் அரசியல் களம்… திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இருப்பதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே முக்கிய புள்ளிகள் பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் மற்றும் சத்யபாமா உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியை EPS தீவிர படுத்தியுள்ளார். அதன்படி IJK கட்சியின் மாநில துணைச் செயலாளரான பாஸ்கர் நேற்று அதிமுகவில் இணைந்த நிலையில் அவரை தொடர்ந்தே திமுகவிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.