காலை நடைப்பயிற்சியில் காத்திருந்த எமன்… ஓடாமல் நின்று 180 கிலோ… ராட்சத கரடியையே அலறவிட்ட பெண்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் ஒரு பெண் தனது வளர்ப்பு நாயுடன் வழக்கம்போல காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக சுமார் 180 கிலோ எடையுள்ள ஒரு மாபெரும் கிரிஸ்லி கரடி அவர்களைப் பின்தொடரத் தொடங்கியது. காட்டின் ஓரத்திலுள்ள பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அந்தக் கரடி, பலமுறை அவர்களை நோக்கி வேகமாக முன்னேறி வந்து பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியது.

பொதுவாக இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் மக்கள் பயந்து ஓடத் தொடங்குவார்கள், ஆனால் அந்தப் பெண் அவ்வாறு செய்யாமல் மிகுந்த மன உறுதியோடு செயல்பட்டார். அவர் அலறவோ அல்லது ஓடவோ செய்யாமல் , அமைதியாக நடைபோட்டபடியே வேண்டாம்… தூரம் போ என்று நிதானமான குரலில் கரடியை எச்சரித்துக் கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அந்தக் கரடி இவர்களை நோக்கி பாய்ந்து ஓடி வந்தபோதும், அவர் நிலைதடுமாறாமல் தைரியமாக நின்றார். அவரது இந்த சாதுரியமான செயலால், சில நிமிடங்களுக்குப் பிறகு கரடி காட்டுக்குள் திரும்பிச் சென்றது.

   

இந்தத் திடுக்கிடும் சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 12.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஆபத்தான நேரத்தில் பதற்றமடையாமல் விவேகத்துடன் செயல்பட்டு தனது உயிரையும், தன் செல்லப் பிராணியின் உயிரையும் காப்பாற்றிக்கொண்ட அந்தப் பெண்ணின் தைரியத்தை இணையவாசிகள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.