CINEMA
இதுவரை எந்த தென்னிந்திய படமும் செய்யாத சாதனையை படைத்த விஜய்யின் G.O.A.T.. கொண்டாடும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் G.O.A.T. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதே சமயம் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலமாக விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளன. இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படம் இது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கோட் திரைப்படம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற விளம்பர திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில் திரையிடப்பட உள்ளது. இந்தத் திரையில் தென்னிந்திய திரைப்படம் வெளியாவது இது முதல் முறையாகும். லண்டனில் உலகப் புகழ்பெற்ற வெளிப்புறத் திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீன் விளம்பர திரையில் இடம் பெற்று கோட் திரைப்படம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் இங்கிலாந்து முழுவதும் உள்ள திரையரங்குகளில் 300-க்கும் மேற்பட்ட திரையில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க