Startup
Preethiக்கு நான் கியாரண்டி… ரூ. 30,000த்தில் ஆரம்பித்து ரூ. 1000 கோடி நிறுவனமான Preethiயின் வரலாறு தெரியுமா…?
Preethi க்கு நான் கேரன்டி என்ற வாசகத்தை நாம் அடிக்கடி விளம்பரத்தில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி மிக்சி என்றாலே ப்ரீத்தி தான் என்று பிரபலமாகி இன்று இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ப்ரீத்தி பிராண்டின் வரலாறு என்ன என்பதை இனி காண்போம்.
பிரெஸ்டிஜ் நிறுவனத்தின் உரிமையாளர்களான டிடி வரதராஜன் மற்றும் டிடி ஜெகநாதன் ஆகியோர் இணைந்து 1978 ஆம் ஆண்டு ரூபாய் 30,000 மூலதனத்துடன் மாயா அப்ளையன்ஸ் என்று பெயருடன் ப்ரீத்தி மிக்ஸி பிராண்டை உருவாக்கினார்கள். ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை வழங்கி வந்த டிடி சகோதரர்கள் ஏன் அந்த உதிரி பாகங்களை வைத்து நாமே அப்ளையன்ஸ் யூனிட் உருவாக்கக் கூடாது என்ற யோசனையின் முடிவில் பிரீத்தி பிராண்டும் உருவானது.
ப்ரீத்தி பிராண்ட் மிக்ஸியுடன் தொடங்கிய மாயா அப்ளையன்ஸ் 1978 ஆம் ஆண்டு சென்னையின் பழமையான ஆர்மியன் தெருவில் 300 சதுர அடி கொட்டகையில் தனது பயணத்தை தொடங்கியது. 5 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கி 5 வருடங்கள் கடுமையான உழைப்புக்கு பின்னர் உள்நாட்டு சந்தையில் ப்ரீத்தி பிரபலம் அடைய ஆரம்பித்தது.
1980லிருந்து 87 வரை கடுமையான போராட்டத்திற்கு பிறகு விற்பனைக்காக வைத்திருந்த கொட்டகை உற்பத்தி யூனிட்டாக மாற்றப்பட்டது. மாயா அப்ளையன்ஸ் என்ற பெயரின் கீழே ப்ரீத்தி மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் விற்பனையை செய்து கொண்டிருந்தது. அதுவரையிலும் அவர்களது தயாரிப்புகளை வாய்வழி விளம்பரம், தரம் மற்றும் புதுமையான பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
1996 க்கு பின்னர் விளம்பரங்கள் தான் வியாபாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அறிந்து கொண்ட நிறுவனர்கள் மார்க்கெட்டிங் செய்வதில் கவனம் செலுத்தினர். எந்த ஒரு பொருளின் விற்பனைக்கு காரணமே நம்பிக்கைதான். அதையே வாசகமாக பயன்படுத்தி ப்ரீத்திக்கு நான் கேரன்டி என்ற ஒற்றை வார்த்தையில் விளம்பரப்படுத்தி இதை பிரபல பிராண்டாக மாற்றினர்.
2000 களில் 13 லட்சம் யூனிட்களை விற்பனை செய்யும் தெற்கு பகுதி மிகப்பெரிய பிராந்தியமாக ப்ரீத்தி மாறியது. பின்னர் 2010க்கு பின்னர் philips பிராண்ட் ப்ரீத்தியை வாங்கியதாக கூறப்படுகிறது. தங்களது பொருட்களில் புதுமையை கொண்டு வந்ததன் மூலம் ரூபாய் 30,000 மூலதனத்தில் ஆரம்பித்த பிரீத்தி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது.