CINEMA
வெளியானது அறிவிப்பு… பிக்பாஸ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்க போவது இவரா…? அடி தூள்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இதுவரை ஏழு சீசன்களை நடத்தி முடித்துள்ளது விஜய் டிவி. இந்த கடந்த ஏழு சீசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமலஹாசன். சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி நெதர்லாண்டில் என்டேமால் உருவாக்கிய பிக் பிரதர் நிகழ்ச்சியின் மறு வடிவமைப்பு ஆகும். ஆரம்பத்தில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டிருந்த பிக்பாஸ். கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் லைவாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியதை அடுத்து அடுத்தது யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்பட்டது. இதற்கிடையில் சரத்குமார், சிம்பு, நயன்தாரா, விஜய் சேதுபதி என நான்கு பேரின் பெயரும் தொகுப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்று நெட்டிசன்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் இறுதியாக நயன்தாராவும் விஜய் சேதுபதியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்வமாக இருப்பதாகவும் இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இன்று பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதி அவர்கள் தான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.