CINEMA
சினிமாவில் இது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்…. ஆனா நடக்கல… மனமுடைந்து பேசிய நடிகர் பரத்…
பரத் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின் முழு பெயர் பரத் ஸ்ரீனிவாசன் என்பதாகும். திருச்சியில் பிறந்து வளர்ந்த நடிகர் பரத் பயிற்சி பெற்ற நடன கலைஞரும் ஆவார்.
2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பரத். பின்னர் 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார். அதே ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தார். இத்திரைப்படம் இவரது சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பரத் புகழின் உச்சியில் இருந்தார்.
பின்னர் பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், 555, காளிதாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எம் மகன் திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. இது தவிர கூடல் நகர், நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற திரைப்படங்களில் பரத் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.
2015 க்கு பிறகு தமிழ் சினிமாவில் சரிவை சந்தித்த பரத், அதற்குப் பிறகு சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் பரத். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பரத் மனமடைந்து பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், தமிழ் சினிமாவில் எவ்வளவோ நல்ல நல்ல கதைகளை தேடி தேடி எடுத்து நடித்தேன். ஏதாவது ஒரு படத்துக்காக எனக்கு விருது ஏதாவது கிடைக்கும்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஏதாவது ஒரு மேடை ஏற மாட்டோமா ஏதாவது விருந்து வாங்கிட மாட்டோமான ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அது நடக்கல. இருந்தாலும் பரவால்ல நமக்கு எது எப்போ கிடைக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா நமக்கு கிடைக்கும் அப்படிங்கிற நம்பிக்கையோடு தான் அடுத்து பயணிச்சிட்டு போய்கிட்டே இருக்கேன் என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார் பரத்.