Connect with us

விஜய் சினிமாவில் நடிக்கணும் என கூறி அழுத சிறுமி.. தியேட்டர் வாசலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

TRENDING

விஜய் சினிமாவில் நடிக்கணும் என கூறி அழுத சிறுமி.. தியேட்டர் வாசலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கோட் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோட் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

   

தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். விஜயின் 69-ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி விட்டார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

   

 

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், கொடி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவுள்ளது விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து அவரது ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டார் என்பதை அறிந்து சோகத்தில் உள்ளனர். விஜயை பொறுத்தவரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜயின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது. நேற்று கோட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் படம் பார்க்க வந்துள்ளார். அந்த சிறுமியிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் சினிமாவில் இருந்து விலகப்போவது பற்றி கேள்வி கேட்டனர். உடனே சிறுமி அழுது கொண்டே விஜய் சினிமாவில் நடிக்கணும் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)

author avatar
Priya Ram

More in TRENDING

To Top