CINEMA
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியும் சன் டிவியும் புது புது சீரியல்களை களம் இறக்கி டிஆர்பி ரேட்டிங்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஏற்கனவே பழைய சீரியல்கள் முடிந்து இப்போது புது புது சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மருமகள், மணமகளே வா, மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே, மல்லி ஆகிய சீரியல்கள் தினமும் விறுவிறுப்பான கதை களத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை சீரியல்களும் சரி ரியாலிட்டி ஷோக்கனும் சரி மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்த சீரியலில் நடிகை அன்சிகா செல்லமா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்னவ் கதாநாயகனாக நடிக்கிறார். இது போக திவ்யா கணேஷ், சிரியா சுரேந்திரன், அனு சதீஷ் கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் முடியப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.