HEALTH
ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா..? அப்போ மிஸ் பண்ணாதீங்க..!!
அன்றாடம் பழங்களை சாப்பிடுவது நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை பயக்கும். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நமது உடலுக்கு நிறைய நன்மைகளை தருகிறது. ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமா இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை தோல் நோய்களிலிருந்தும் மற்ற நோய்கள் இருந்து பாதுகாக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமாக இருப்பதால் அது தோல் செல்களை பாதுகாத்து நமது தோல் பிரச்சினைகளை குறைக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் பொட்டாசியம் நமது ரத்த அழுத்தத்தை கண்ட்ரோல் செய்து இதய பாதிப்புகளுக்கான அபாயத்தை குறைக்கிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்தும் இருப்பதால் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் வருவதை தடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் கால்சியம் இருப்பதால் இது எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது. விட்டமின் B நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால் அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவதால் நமது பற்களில் இருக்க கூடிய எனாமல் பாதிக்கலாம். சிலருக்கு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அலர்ஜி இருக்கலாம். இதனால் உங்களுக்கு அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.