INSPIRATION
உலகிலேயே அதிக Subscribers வைத்திருக்கும் Youtuber… இவரின் சொத்து மதிப்பு தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க…
பொழுதுபோக்ற்க்காக இருந்த youtube ஆனது இன்று பலருக்கும் வாழ்வாதாரமும் வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த youtube-யில் விலாக்ஸ், சமையல், அழகு குறிப்புகள், விளையாட்டுகள் என பல தரப்பட்ட வீடியோக்களை போட்டு பலர் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் உலகத்திலேயே அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்டவராகவும் அதிக வருமானம் ஈட்டும் ஒரு நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் ஜிம்மி டொனால்ட்சன்,மிஸ்டர் பீஸ்ட் என்னும் youtube சேனலை நடத்தி வருகிறார். உலகிலேயே 300 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டிருப்பது இவர் மட்டும்தான். 2011 ஆம் ஆண்டு youtube-ல் மிஸ்டர் பீஸ்ட் என்ற சேனலை ஆரம்பித்த ஜிம்மி டொனால்ட்சன் கேமிங், ஸ்டன்ட் போன்ற பலதரப்பட்ட கண்டன்டுகளை அதில் பதிவேற்றி வந்தவர்.
மிஸ்டர் பீஸ்ட் கேமிங் உட்பட பல சேனல்களை நடத்தி வருகிறார் ஜிம்மி டொனால்ட்சன். இது மட்டுமல்லாது youtube இல் வரும் வருமானத்தை வைத்து பல தரப்பட்ட தொழில்களையும் நடத்தி தொழில் அதிபராகவும் இருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட். 1998 ஆம் ஆண்டு பிறந்த ஜிம்மி டொனல்ட்சன் அவர்களின் வயது 26 ஆகும். இவர் கிரீன்வைல் வடகரோலினாவை சேர்ந்தவர்.
மிஸ்டர் பீஸ்ட் பர்கர், வணிகப் பொருட்கள் விற்பனை, youtube ஸ்பான்சர், யூட்யூப் விளம்பரங்கள் போன்றவற்றை கொண்டு ஒரு வருடத்திற்கு 54 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி டொனல்ட்சன் அவர்களின் சொத்து மதிப்பு இன்றைய நிலவரப்படி இந்திய பணத்தில் 5000 கோடி மதிப்பிலான சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார் ஜிம்மி டொனால்ட்சன்.
உணவகம், டிரஸ்ட், shopmrbeast.com என்ற ஆன்லைன் ஸ்டோரில் ஆடைகள் முதல் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் ஜிம்மி டொனால்ட்சன் அக்டோபர் 2019 டீம் ட்ரீஸ் இன் முயற்சியை தொடங்கினார். 20 மில்லியன் மரங்களின் நடுவதற்கு 20 மில்லியன் டாலர் திரட்டுவதற்கு இவர் முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டவர். இவ்வளவு சிறிய வயதில் youtube சேனல் வைத்து தனது திறமையால் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கும் ஜிம்மி டொனால்ட்சன் இன்றைய இளம் யூடியூபர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.