CINEMA
விவாகரத்தைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்… ராமராஜன் மனிதருள் மாணிக்கம் என நிரூபித்த தருணம்…
ராமராஜன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் புகழின் உச்சியில் இருந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர். இவரை மக்கள் நாயகன் என்று அன்போடு ரசிகர்கள் அழைத்தனர்.
1977 ஆம் ஆண்டு ராமராஜன் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து தனது வாழ்க்கையை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் ராமராஜன்.
1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்தார். இததிரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 25 மையங்களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. ஏழெட்டு மையங்களில் ஒரு வருடத்திற்கு மேல் கடந்து 400 நாட்கள் ஓடி திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. இத்திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் ராமராஜன். நடிகை கனகா அறிமுகமானதும் இத்திரைப்படத்தில்தான். இந்த திரைப்படம் வந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கனகா என்று பெயரிட்டனர். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் பேரும் புகழையும் பெற்றது. ராமராஜனுக்கு கரகாட்டக்காரன் திரைப்படம் சினிமாவில் திருப்புமுனையாக இருந்தது.
தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், பாட்டுக்கு நான் அடிமை போன்ற கிராமத்து கதைக்களத்தை கொண்ட படங்களில் நடித்து கிராமத்து நாயகனாக வலம் வந்தார் ராமராஜன். 1987 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் 13 ஆண்டுகளுக்கு பிறகு 2000 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் அருண் மற்றும் அருணா ஆகியோர் இருக்கின்றனர்.
ராமராஜன் மற்றும் நளினி பிரிய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது அங்கு வந்த ராமராஜன் அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் விவாகரத்தை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார். அப்பொழுது ராமராஜன் நளினி என்னுடைய மனைவி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் எதுவும் பேச முடியாது என்று கூறி சென்றிருக்கிறார். அதே நிருபர் இருவருக்கும் விவாகரத்து முடிந்துவிட்ட பின்னர் வந்து அதே கேள்வியை கேட்டிருக்கிறார். அப்பொழுதும் ராமராஜன் எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இப்போ அவர் யாரோ நான் யாரோ வேறொரு பெண்ணை நான் தரக்குறைவாக என்றைக்கும் பேச மாட்டேன் என்று கூறி தட்டி கழித்து மனிதருள் மாணிக்கம் ஜென்டில்மேன் ராமராஜன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.