CINEMA
அடுத்த ஹீரோயின் ரெடி .. மாடர்ன் ட்ரெஸ்ஸில் மனதை கவரும் ரவீனா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!
ரவீனா தாஹா விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரவீனா நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் ரவீனா நடித்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரவீனா பிரபலமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார். பூவே பூச்சூடவா சீரியலில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு கதை சொல்ல போகிறோம் திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து ஒரு படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க உள்ளார். கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். டான்ஸ் வீடியோக்களையும் பதிவிடுவார். தற்போது வெள்ளை நிற மார்டன் உடை அணிந்து பிரவீனா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்