‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை இவ்வளவா?…..சாதனை படைத்த திரைப்படம்…..எத்தனை கோடினு தெரியுமா உங்களுக்கு?…..

By Begam on ஐப்பசி 1, 2022

Spread the love

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ வெளியான முதல் நாள் அன்று செய்த வசூல் குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

எழுத்தாளர்  கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான படைப்பு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இந்தப்படத்தை முதலில் எம்ஜிஆர் எடுக்க எண்ணினார்.பின்னர் கமலஹாசன் எடுக்க முயற்சித்தார். தற்பொழுது இந்த படம் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு படமாக வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.

   

   

இப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளாராம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இசையும் அமைந்துள்ளது எனலாம்.

 

இப்படத்தில் ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரத்தில் கார்த்தியும், ‘குந்தவை’ கதாபாத்திரத்தில் த்ரிஷாவும், ‘ஆதித்த கரிகாலன்’ கதாபாத்திரத்தில் சியான் விக்ரமும், ‘அருண்மொழிவர்மன்’ கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும், ‘பெரிய பழுவேட்டயர்’ கதாபாத்திரத்தில் சரத்குமாரும், ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும், ‘நந்தினி’ கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும், ‘சுந்தர சோழன்’ கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜும், ‘ஆழ்வார்கடியான் நம்பி’ கதாபாத்திரத்தில் ஜெயராமும் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக நேற்றைய தினம் இப்படம் ரிலீஸ் ஆனது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் அன்றே 50 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ தற்பொழுது நல்ல விமர்சனத்தையும், வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது.