“அவருக்கு என்ன அதிகப் பிரசங்கித்தனமா?”.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்து வாங்கிய பெ. சண்முகம்.. விஜய் கூட்டணியில் வெடித்த முதல் மோதல்..!!

Spread the love

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) எம்.பி. இடத்தை காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) விட்டுக்கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்பதவிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் (X) தள பக்கத்தில், த.வெ.க., காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிகள் உள்ளடங்கிய “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின்” முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தப் பதிவு புதிய கூட்டணியின் பங்காளிகளாகக் கருதப்பட்ட இடதுசாரி வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய கூட்டணியின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, அந்தப் பட்டியலில் சிபிஐ(எம்) கட்சியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று அவர் கொந்தளித்துள்ளார்.

மேலும் தனது பதிவில் விளக்கியுள்ள சண்முகம், “இப்படி ஒரு புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்பது குறித்தோ யாரும் எங்களை இதுவரை அணுகவும் இல்லை, எங்களோடு ஆலோசிக்கவும் இல்லை. த.வெ.க. ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் வெளியே இருந்து ஆதரவு கொடுத்துள்ளது என்பது ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. இதையெல்லாம் மீறி எங்களைக் கேட்காமல் எங்களது பெயரைப் பயன்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் இந்த எக்ஸ் பதிவை ‘அதிகப் பிரசங்கித்தனம்’ என்றுதான் சொல்ல வேண்டும்” என மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரின் ஒற்றைப் பதிவால் புதிய கூட்டணிக்குள் வெடித்துள்ள இந்த மோதல் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

8 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

8 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

9 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago