gv prakash kumar

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜீவி பிரகாஷ்குமாரின் படம் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

By Elango on மாசி 4, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருபவர் ஜீவி பிரகாஷ் குமார். இதுவரை 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவான லக்கி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் மேக்னா சுமேஷ் இளங்கோ குமரவேல் தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

லக்கி படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி இந்த படத்தை தயாரித்துள்ளனர். லக்கி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் 20ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.