Silambattam movie

ரி ரிலீஸ்க்கு படங்களுக்கு ரசிகர்கள் தரும் அமோக ஆதரவு – பழைய படங்களை தூசி தட்டும் தயாரிப்பாளர்கள், இத்தனை படங்கள் மீண்டும் திரைக்கு வருகிறதா?

By Elango on மாசி 4, 2026

Spread the love

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரி ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் படையப்பா கில்லி 3 சச்சின் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வசூலை பெற்றன. கடைசியாக வெளியான மங்காத்தா படமும் 20 கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை வசூலை அள்ளியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பல படங்கள் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சிலம்பரசன் நடித்த சிலம்பாட்டம் மாதவன் நடித்த மின்னலே சத்யராஜ் நடித்த அமைதிப்படை விஜய் நடித்த பூவே உனக்காக டி ராஜேந்தர் இயக்கிய உயிருள்ளவரை உஷா போன்ற படங்கள் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக அப்போதே கொண்டாடப்பட்ட படங்களாகும்.