“நூலிழையில் தப்பிய உயிர்… மகனைத் தூக்கி வாரி அணைத்த தந்தை”- இணையத்தையே கண்கலங்க வைத்த பாசப் போராட்டம்…!

Spread the love

சமூக வலைதளங்களில் ஒரு தந்தையின் பாசத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தந்தை தனது விளைநிலத்தில் டிராக்டர் ஓட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது பணியில் தீவிரமாக இருந்ததால், அவருக்குத் தெரியாமல் அவரது சிறிய மகன் விளையாட்டாக வந்து டிராக்டரின் பின் பகுதியில் ஆபத்தான முறையில் அமர்ந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை. ஒரு சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடிய அந்தச் சூழல், பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.

அருகில் இருந்தவர் சத்தமிட்டு எச்சரித்த பிறகு, தந்தை பதற்றத்துடன் டிராக்டரை நிறுத்திவிட்டுப் பின்னால் திரும்பிப் பார்க்கிறார். அங்கே தனது மகன் இருப்பதைக்கண்ட அந்தத் தந்தையின் முகத்தில் பயமும் அதிர்ச்சியும் ஒருசேரத் தெரிகிறது. அடுத்த நொடியே டிராக்டரில் இருந்து குதித்து ஓடிச் சென்று, தனது மகனை வாரி அணைத்துக் கொள்கிறார். ஒரு பெரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்ட அந்தத் தருணத்தில், தனது மகனை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதிலிருந்து பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. “தந்தையின் பாசம் ஈடு இணையற்றது” என்றும் “குழந்தைகளின் பாதுகாப்பில் ஒரு நிமிடம் கூட கவனக்குறைவாக இருக்கக்கூடாது” என்றும் இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வேலைப்பளுவின் நடுவிலும் பிள்ளைகளின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. அதே வேளையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அந்த அன்பான பிணைப்பு பலரது இதயங்களை நெகிழச் செய்துள்ளது.

Muthu Mani

Recent Posts

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

12 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

20 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

38 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

46 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

52 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

1 மணத்தியாலம் ago