9.34 ரூபாய் கடனுக்கு போன் போட்ட வங்கி… 66 பைசா பாக்கியை கொடுங்க… சில்லறை இல்லையா..? அப்போ கோர்ட்டுக்கு வாங்க… வங்கிக்கே செக் வைத்த விவசாயி..!

Spread the love

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கனரா வங்கியில் தான் பெற்ற 50,000 ரூபாய் கடனை அனைத்துத் தவணைகளுடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், வங்கித் தரப்பிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவரது கடனில் இன்னும் 9.34 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், அதை உடனடியாகச் செலுத்துவதற்கு நேரில் வங்கிக்கு வருமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வளவு சிறிய தொகைக்காகத் தன்னை அலைக்கழித்த வங்கியின் போக்கைக் கண்டு அந்த விவசாயி கடும் அதிருப்தி அடைந்தார்.

வங்கிக்குச் சென்ற விவசாயி, கவுண்டரில் 10 ரூபாய் நோட்டை வழங்கிவிட்டு, நிலுவைத் தொகையான 9.34 ரூபாயைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள 66 பைசாவைத் தருமாறு கோரினார். ஆனால், வங்கியிடம் சில்லறை இல்லாத காரணத்தால் அந்த 66 பைசாவை அவர்களால் திருப்பித் தர இயலவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயி, “வெறும் 9.34 ரூபாய்க்காக ஒரு வாடிக்கையாளரை வங்கிக்கு அழைக்க முடியும் என்றால், ஒரு வாடிக்கையாளருக்குச் சேர வேண்டிய 66 பைசாவையும் திருப்பித் தர வேண்டியது வங்கியின் கடமை” என்று வாதிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது 66 பைசாவைத் தராமல் ஏமாற்றுவது சேவை குறைபாடு என்று சுட்டிக்காட்டிய அந்த விவசாயி, தற்போது கனரா வங்கிக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் (Consumer Court) மனுத் தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு சாமானிய மனிதன் தனது உரிமையை நிலைநாட்ட வங்கியுடன் நடத்திய இந்த 66 பைசா போராட்டம், தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago