“காதலியுடன் இருக்க வேண்டும்…” நேர்மையாக லீவு கேட்ட ஊழியர்… மேலாளரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா….?

By Devi Ramu on மார்கழி 18, 2025

Spread the love

தனது காதலி வெளியூர் செல்வதற்கு முன்னால் அவருடன் ஒரு நாளைச் செலவிட விரும்புவதாகக் கூறி, தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு அனுப்பிய விடுமுறை விண்ணப்பம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி விடுப்பு எடுக்கும் காலங்கள் மாறி, இன்றைய தலைமுறையினர் தங்களது தனிப்பட்ட காரணங்களை மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளனர்.

அந்த ஊழியரின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது மேலதிகாரி விரேன், காதலுக்கு மறுப்புச் சொல்ல முடியாது எனக் கூறி அந்த விடுமுறைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது ஊழியர்கள் விடுப்பு கேட்பதில் காட்டும் வெளிப்படைத்தன்மை ஆரோக்கியமான மாற்றமாக இருப்பதாக அந்த அதிகாரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

   

அந்த ஊழியர் அனுப்பிய நேர்மையான மின்னஞ்சலையும் அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து பாராட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பணியிடங்களில் நிலவ வேண்டிய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தை உணர்த்துவதாகக் கூறி, பலரும் ஊழியரின் நேர்மையையும் மேலதிகாரியின் பெருந்தன்மையையும் பாராட்டி வருகின்றனர்.