என்னுடைய 2 படங்களில் நடிகர் அஜீத்குமார் நடிக்கிறார் – ரசிகர்களுக்கு ஷாக் தந்த இயக்குனர் ராஜகுமாரன்!

By Elango on மார்கழி 18, 2025

Spread the love

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம் நீ வருவாய் என. நாயகனாக பார்த்திபன் நாயகியாக தேவயானி நடித்த இந்த படத்தில் கெஸ்ட்ரோலில் மிலிட்டரி ஆபீசர் கேரக்டரில் நடிகர் அஜீத்குமார் நடித்திருந்தார்.இப்போது இந்த படத்தின் 2ம் பாகம் 3ம் பாகம் படங்களில் அஜீத்குமார் நடிக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ராஜகுமாரன் கூறியதாவது, நீ வருவாய் என படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகம் 3ம் பாகம் இயக்க திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறேன். பல ஆண்டுகளாகவே அந்த 2 படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதி விட்டேன். ஏற்கனவே அஜீத்குமார் தரப்பில் இதுகுறித்து பேசி விட்டோம்.அவர்களும் கண்டிப்பாக பண்ணலாம் என்றுதான் கூறியிருக்கின்றனர்.

   

இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் சம்பளம் படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியிடம் இன்னும் பேசவில்லை. அந்த விஷயங்கள் எல்லாம் சரியாக கைகூடி வரவேண்டும். நீ வருவாய் என படத்தில் கதைப்படி நடிகர் அஜீத்குமார் இறந்துவிடுவார். அதுதான் கதை. ஆனால் அவர் இறந்தது போல நான் படத்தில் காட்டவில்லை. அதுதான் எனக்கு இனி உதவப் போகிறது. இனி எடுக்கும் 2ம் பாகம் 3ம் பாகம் படங்களில் அஜீத்குமார் இறக்கவில்லை. அவர் மிலிட்டரிக்கு போய்விட்டார் என்று கதையை மாற்றி விடுவேன்.

   

நீ வருவாய் என 2ம் பாகத்தை விட 3ம் பாகத்தில்தான் அஜீத்குமார் வரும் காட்சிகள் அதிகம். அதனால் 2 பாகங்களையும் ஒரே காலகட்டத்தில்தான் ஷூட்டிங் செய்ய உள்ளேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இன்று நடிகர் அஜீத்குமார் மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக பெரிய பட்ஜெட் படங்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி நடித்து வரும் நிலையில், ராஜகுமாரன் சொல்வது நடக்குமா என்பதே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.