வெடித்த உட்கட்சி மோதல்…! திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா.. செந்தில் பாலாஜிக்கு புதிய சவால்…!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love
கோயம்புத்தூர் திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. சுமார் 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளைத் துறந்திருப்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அதிமுக மற்றும் இதர கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கே கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகப் பழைய நிர்வாகிகள் நீண்டகாலமாக அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக, பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல், ‘புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை’ என்ற நிலை நீடிப்பதே இந்த ஒட்டுமொத்த ராஜினாமாவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமை இப்போதே தயாராகி வரும் நிலையில், கோவையில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிருப்தி குழுவினரை சமாதானப்படுத்தவும், கோஷ்டி பூசலை முடிவுக்குக் கொண்டு வரவும் திமுக தலைமை தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி இந்தப் பிரச்சனையை எவ்வாறு கையாண்டு கோவையில் கட்சியை ஒருங்கிணைக்கப் போகிறார் என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் உன்னிப்பான கவனிப்பாக உள்ளது.