தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவாளராக அறியப்பட்ட நடிகர் தாடி பாலாஜி, தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். விஜய் கட்சி தொடங்கிய காலம் முதல் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த போதிலும், பாலாஜிக்கு கட்சியில் எந்தவிதப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. மேலும் தவெக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தன்னை விஜய்யைச் சந்திக்க விடாமல் தடுத்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தவெக நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, அவர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது அவர் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கியப் பொறுப்பில் இணைந்து தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
