சமூக வலைதளங்களில் வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதல் குறித்த வீடியோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தை உலுக்கி வரும் ஒரு வீடியோவில், நள்ளிரவில் ஒரு வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றின் முன்னால் ராட்சத யானை ஒன்று ‘எமதர்மன்’ போல வந்து நிற்பது போன்ற காட்சிகள் காண்போரை உறைய வைக்கின்றன.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இருட்டில் சாலையோரம் நின்றிருந்த காரை நோக்கி புதர்களுக்குள் இருந்து சீறிப்பாய்ந்து வந்த யானை, ஆக்ரோஷத்துடன் தாக்குதலைத் தொடங்கியது. தனது பலமான தும்பிக்கையால் காரை ஒரு பொம்மையைப் போலத் தூக்கிப் பிடித்து அசைக்கத் தொடங்கியது. காரின் கண்ணாடிகள் உடையப் போகும் தருவாயில், காரைத் தலைகீழாகக் கவிழ்க்க யானை முயன்ற போது, அங்கிருந்தவர்கள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பினர்.
View this post on Instagram
யானையின் பிடியில் இருந்து தப்பிக்க காரின் ஓட்டுநர் காட்டிய அசாத்திய துணிச்சலும் சமயோசித புத்தியும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. யானை காரைத் தூக்க முயன்ற அதே நொடியில், ஓட்டுநர் சாமர்த்தியமாக காரை இயக்கி மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்த்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த திக் திக் வீடியோ தற்போது 21 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
